அனுபவ மரம்

பட்ட மரம்
சொல்வதைக் கேளுங்கள்
தன் அனுபவத்தை ...!

தான் வாழ்ந்த கதை
சுகமானதே
தழைத்து நிழல் தந்து
காய்ந்த சருகுகளை
உரமாக்கியே ...!

பூ காய் கனிகளைத் தந்து
பறவைகளுக்கு
புகழிடம் தந்து
வாழ்ந்து வந்தேனே ...!

களைப்புற்றோருக்கு
நிழல் தந்து உயிர் தந்து
பசுமையால் காற்றாகி
குளிர்ந்து மழை தந்து
வளமாக்கினேனே ...!

பொல்லாத பருவ காலத்தில்
என் பிள்ளைகள் (இலைகள்) உதிர்ந்தாலும்
மொட்டை நிலை வந்தாலும்
உயிரினங்கள் விலகினாலும்
வெட்ட வெட்டத் தழைத்து
உயிர்த்து வாழ்ந்தேனே ...!

கோயிலில் குடி வைக்க
தெய்வீக மானேன்
அனைவரும் தொழுதிட
கொடிமரமாய் ஆனேனே ...!

எழுதியவர் : தயா (11-Aug-13, 11:12 pm)
Tanglish : anupava maram
பார்வை : 84

மேலே