பாசம் விட்டுப் போகுமா?
பறக்கத் தெரிந்த
பறவைகள் எல்லாம்
பாசம் மறந்து போகுமா?
பாசம் இன்றிதான் வாழுமா ?
பறக்கின்றதே விண்ணில்
தன் இரண்டு கால்களையும்
கட்டித் தழுவியே...!
பறக்கத் தெரியாத
பறவைகள் எல்லாம்
பாசம் மறந்து போகுமா?
பாசம் இன்றிதான் வாழுமா?
கூவிக் கூடி மகிழ்கின்றதே மண்ணில்
தன் இரண்டு இறக்கைகளைத் தழுவியே...!