வேதனை

வாழ்க்கையில் தோல்வியுற்றவனின் கூக்குரல் :
இந்த ஷணமே காற்றோடு காற்றாக கரைந்துவிட யாசிக்கிறேன் ........
நான் பிறக்காமலே இருந்திருந்தால்...
என் தாயின் பிரசவ வலி மீந்திருக்கும்...
என் தந்தையின் வியர்வை துளிகள் மிச்சமாகி இருந்திருக்கும் ..
என் உடன் பிறப்புகளுக்கு பல சலுகைகள் கிடைத்திருக்கும் ...
நான் சுவாசிக்கும் காற்றே என் கடைசி மூச்சாகி போனால் ....
நிம்மதி அடைவேன் ..
உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களும் எனக்காக படைக்கப்பட்டது போலவே ...
இதை காண மாட்டாமல் என் கண்கள் எப்போதோ இல்லாதிருந்திருக்க வேண்டுகிறேன்
சுக்கான் இல்லா கப்பல் போல் திசை தடுமாறும் வாழ்க்கை .....
சுனாமியாய் வீசும் துன்பங்கள் .
என்னை நம்பி முதலீடு செய்த என் பெற்றோர் ......
ஒரு முறை மட்டும் உருக்குலைக்காமல்.
ஒவ்வொரு முறையும் உருக்குலைக்கும் பட்டயங்களாய் தோல்விகள் ........
பந்தை போல் உதைபடும் என்வாழ்க்கை
ஆறி போன ரணத்தில் ஆழமான காயங்கள் ..
விழிக்கும் முன்னே ..........
இறந்துவிட்டதை போன்றதோர்
உணர்வு
வலிகளை வார்த்தைகளாக்கி விட்டு
விடைபெற துடிக்கும்
மனம் ....
உயிர்..
பேனா ..(விசை பலகை )
ஒடிந்த சிறகுடன் பறக்க நினைக்கும் நான்..........