சுதந்திரக்கப்பல்
பல கைகளால் சேர்ந்து
பலகைகளால் உருவானது
நம் பாரதக்கப்பல் !
ஆனால் இன்று
கப்பலின் வர்ணம் நீக்கி
பலகைகளை பாகுபடுத்தும்
பாழான எண்ணம்
பரவலாக உள்ளனவே !
பாரதத்தின் பெருமை சேர்க்க
பாங்குடனே குறை களைந்து
பாரதி,காமராஜ்,கலாமின்
கனவுகள் நனவாக
கரம் பிடிப்போம் ஒன்றாக!
அறுபத்தாறு ஆண்டுகளாய்
அலையின் பின்னால்
அசைந்தாடி செல்லும்
சுதந்திரக்கப்பலை
இளைய பாரதமே
2020-ன் இலக்கு நோக்கி
இமயத்தின் உச்சிக்கு
இந்தியாவின் புகழ் பரப்ப
புது பொலிவுடன் புறப்படுவோம்
புதிய கப்பலில் நாமும்!