தித்திக்கும்

தேனீலும் பாலிலும் நனைந்த வண்டோ !!
மாலையும் காலையும் தொடரும் தென்றலோ !!
பாவையும் பல்லவையும் கொண்ட குயிலோ !!
காதலும் ஆசையும் கடந்த கவியோ !!
ஆடலும் மாடலும் கலந்த மயிலோ !!
இரவிலும் பகலிலும் மறைந்த நிலவோ !!
பசுமையிலும் இளமையிலும் மலர்ந்த மலரோ !!
இடியிலும் மின்னலிலும் பிறந்த வானவில்லோ !!
சுவைக்கவும் இனிக்கவும் வந்த கனியோ !!
கற்பனையும் வண்ணமும் தீட்டிய ஓவியமோ !!
பவளமும் முத்துக்களும் பிறக்கும் கடலோ !!
மொத்தத்தில் உள்ளத்தில் மறையாத நினைவோ !!
புலமைக்கு கிடைத்த மெல்லினமோ...!!!