மழை நீர்

என் கண்கள் கலங்குதடி
நீ அழும் வேளையிலெல்லாம்

நீ அழுவதோ
மானுடரின் இன்பத்துக்காக
நான் அழுவதோ
உந்தன் கண்ணீருக்காக...

இன்னும் எத்தனை
மழை நீரை - நீ
கொட்டி தீர்த்தாலும்,...

கடல் நீரை,
மழை நீர் என்று
வர்ணிக்குமே தவிர - அது
உந்தன் கண்ணீர் என்று
யாரும் அறியார்...

எழுதியவர் : மலர் பிரபா (14-Aug-13, 7:10 pm)
சேர்த்தது : MalarSmani
Tanglish : mazhai neer
பார்வை : 358

மேலே