"நான் , உன்"

தேனிதழை தீண்டிச் செல்லும்
தென்றல் காற்றை சுவாசிப்பவன்

தெளி நெற்றியில் தீட்டியிருக்கும்
திருநீற்றை நேசிப்பவன்

கணுக்காலின் கொலுசொலிகளை
அலுக்காமல் பூசிப்பவன்

விழிப்பார்வை வினாக்களுக்கு
விடையறியாமல் யோசிப்பவன்

தளிர்க்கூந்தல் வாசமதை
தவறாமல் யாசிப்பவன்

உடை மறைக்கும் இடையழகை
உள்ளத்தால் வாசிப்பவன்

இதயத்தில் இடம் கிடைத்தால்
இன்றே சொர்க்க வாசியிவன்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (14-Aug-13, 8:28 pm)
பார்வை : 122

மேலே