சுதந்திரக் காற்றினை சுவாசித்த முதல் நாள்

மூண்டெழுந்த மூலக் கனலால்
ஆர்த்தெழுந்த ஆவேசத்தில்
தியாகத்தில் சிவந்த மலராய்
அமைதிப் புரட்சியின் அற்புத பரிசாய்
சரித்திரத்தின் சாசுவத சின்னமாய்
ஒர் புதிய நள்ளிரவின் அதிசயமாய்
வானில் புத்தொளி வீசிப் பறந்தது
நம் தேசீய மூவர்ணக் கொடி.

அது ஆகஸ்ட் ப்தினைந்து
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பாத்தேழு
எனும் சுதந்திரத் திருநாள்
பாரதத்தினர் சுதந்திரக் காற்றினை
சுவாசித்த முதல் நாள்

சுதந்திர தின நல் வாழ்த்துக்களுடன் ,
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (15-Aug-13, 10:17 am)
பார்வை : 124

மேலே