நல்லவனாய் நான் எதற்கு..?

உழைக்கின்ற மனிதர்கூட்டம்
உயர்வுதாழ்வு எல்லாம் நீக்கம்
இன மதம் சாதி சண்டை
இருப்பதாக தெரியவில்லை
ஏழையென்று யாருமில்லை
ஏமாற்ற ஆளுமில்லை

அரசியல் மேடையில்லை
ஆரவார இரைச்சலில்லை
தண்ணீருக்கு தட்டேயில்லை
தடைமின்சார வெட்டுமில்லை
குறைகளை பார்பாரில்லை
குற்றம்சொல்ல யாருமில்லை

குண்டு குழி ரோடுமில்லை
குண்டுகளும் வெடிப்பதில்லை
மது குடிக்க கடையுமில்லை
மாது பிடிக்க மங்கையில்லை
கேளிக்கைகள் ஏதுமில்லை
கேட்டாலும் கிடைபதில்லை

சுகாதாரம் சுத்தமுண்டு
சுகமான உறக்கமுண்டு
பசிபோக்க உணவும் உண்டு
பாய்விரிக்க இடமுண்டு
சத்தமொன்று உரக்ககேட்டால்
சட்டென்று கேட்பாருண்டு

கற்பனை கனவு ஜாதி
கவிதைகள் பாடும் ஜாதி
உண்மையை உணரும் ஜாதி
உறவினை பேசும் ஜாதி
நண்பனாய் இணையும் ஜாதி
நான் கண்ட மனித ஜாதி

சிறையென்ற சொல் செதுக்கி
சினஞ்சிறு மாடங்களாம்
சிந்தித்தேன் சிலாகித்தேன்
நகரத்தில் நல்லவனாய் நான்
நரகத்தில் வாழ்கின்றேன்..!
குற்றவாளி பெயர்தாங்கி
குறையில்லா சிறைசாலை
நகரத்தில் அவன்..!

எழுதியவர் : குமரி பையன் (17-Aug-13, 1:33 am)
பார்வை : 160

மேலே