நான் நல்லவனா ?

என்னை நான் கேட்கும் ஒரே ஒரு கேள்வி நான் நல்லவனா, ?

ஆனால் என்னால உடனே பதில் சொல்ல தெரியாது அப்படினா நான் என்ன கெட்டவனா ?
இல்லை இல்லவே இல்லைன்னு உடனே சொல்லுவேன்,

கொஞ்சம் சிந்தித்து பார்த்தாள் நான் கொஞ்சம் கெட்டவன் தான்னு தோணும்,
அதை எப்போதும் ஒத்துகொள்ள இந்த மனசு இடம் கொடுக்காது , குரங்குல இருந்து நாம வந்ததுனாலையோ என்னவோ நமக்கு கொஞ்சம் அதன் புத்தி எட்டிபார்க்கும்

நூறு சதவிகிதம் ஒரு மனிதன் நல்லவனா இருக்க முடியும்னு என்னால ஒத்துக்க முடியல
ஒருவேளை அப்படி இருந்தால் அவன் தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் ,என்ன பொருத்தவரைக்கும் நல்ல குணமும் தீய குணமும் சேர்ந்த கலவை தான் மனிதன்

என்னைக்கு நல்ல குணங்கள் எனக்குள்ள அதிகமா தோன்றுதோ அன்றைக்கு நான் நல்லவன், இல்லைனா நான் ? ,,,,,,,,

நானே நல்லவனான்னு என்னை கேட்டால் எனக்கே குழப்பமா இருக்கும் போது நான் எல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யலாமா?

கூடவே கூடாது ,

ஆனால் ஒன்று செய்யலாம் என்னை நான் திருத்தி கொள்ள முயற்சி செய்யலாம்

நான் உங்களுக்கு சொல்லவில்லை இது எனக்கு ஒருத்தர் சொன்னது உலகத்துல ஒருத்தர் இன்னொருத்தருக்கு அளிக்கும் பொழுது ஆயிரம் தடவை கூட சிந்திக்கலாம் இதை அளிக்க நான் தகுதியுடையவனா என்று அது தான் அறிவுரை

இதுவரைக்கும் தெரியல நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்று எனக்கு

நல்லவர்கள் தெரியபடுத்தவும் நான் யார் என்று

நன்றி

எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்


உங்கள் நண்பன்

சதீஸ்

எழுதியவர் : சதீஸ் (17-Aug-13, 2:42 pm)
பார்வை : 127

மேலே