Carry Bag (பிளாஸ்டிக் பை)

உங்கள் உபயோகத்திற்கு உதவ வந்த நான்
இப்போது உங்கள் உபத்திரவமாய் மாறியுள்ளேன்
குப்பையாய் என்னை நீங்கள் உதறினாலும்
உங்களை உதற நான் தயாரில்லை
மளிகைக்கடையிலும், காய்,கறிக்கடையிலும் நானே முன்னவன்
மனிதரின் சோம்பலால், மகத்தான வாழ்வைப்பெற்றவன்
என்னை உபயோகப்படுத்த எத்தனை தடை வந்தாலும்
அனைத்தையும் உடைத்தெறிந்து என்னைக் காப்பவர்கள், என்னைத் தயாரிப்பவர்களே
பாரதத்தில் சகுனியாய், ராமாயணத்தில் கூனியாய், மனிதர்தம் வாழ்க்கையில் நானாவேன்
சகுனியும், கூனியும் அக்காலகட்டம் மட்டுமே
ஆனால் நானோ, உங்கள் சந்ததியினரையும் மறக்காமல் உருக்குலைப்பேன்

எழுதியவர் : காரைக்குடி ச. சரவணன். (17-Aug-13, 3:12 pm)
பார்வை : 238

மேலே