+++((( சென்னையில் இடியுடன் கூடிய மழை )))+++
நீலவானம் மூடி மூடி மேகமூட்டமனதே
மேகமூட்டம் கண்டு,சிறுபிள்ளைஆட்டம் போடுதே
வாகன நெரிசலிலே திணறுகின்ற ஊரிது
வானவில்லை பார்ப்பதே இங்கு அரிதானது
யாரடித்து அழுததடா அந்த கார்மேகம்
அதனாலே பூமிக்கு அளவில்லா உற்சாகம்
நிலவுக்கு இடம் கொடுத்து,நீர் சிந்தும் மேகம்
சில்லென்று எனை தொட்ட மழை, பெண் தேகம்
மேகத்தில் யாருக்கோ அடிதடி
பூமியில் அதனாலே பெரும் இடி
கேட்காமல் கொடுக்கின்ற பாரிவள்ளல் மேகமே
நிற்காமல் எந்நாளும் கரைந்தோடுமே
வானிலை அறிக்கை கூட
வந்து வந்து சேதி சொல்ல
பாதி சேதி மெய்யானதே
மீதி சேதி பொய்யானதே
தூறல் மழை சொட்டச் சொட்ட
துண்டுத்துண்டாய் மின்னல் வெட்ட
மேகங்களும் சத்தம் கொட்ட
சென்னையில் இடியுடன் கூடிய மழை
(அக்கா பிரியா.k கொடுத்த தலைப்பில் எழுதப்பட்ட
மழை துளிகள்)