சலனம்

சாலையோர மண்சுவர் வீடு
ஒருபக்கச் சுவரில் மட்டும்
விளம்பரத்தை உடுத்திவிட
அனுமதி கேட்டார்கள்

சுவர் கரைந்துவிடக் கூடாதென
கூரையைச் சரிசெய்யச் சொல்லி
சன்மானமும் கொடுத்ததால்
சம்மதிக்க நேர்ந்தது

இப்போது என்
மனைவிக்கும் மகளுக்கும்
விளம்பரத்தை வெறித்துப் பார்ப்பதே
வாடிக்கையாகிப் போனது

ஆம்
அந்த நகைக்கடைக்கு
நாமும் ஒருமுறையேனும்
வாடிக்கையாளர் ஆகமாட்டோமா என்று!

எழுதியவர் : முகவை என் இராஜா (18-Aug-13, 11:06 am)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 38

மேலே