அன்பரியாத அனாதை....
அறியாத காலத்தில் அணைப்பில் வைத்த தாயே
பிரியாமல் நீ இருந்தால்,
தெரியாது போகாது உன் அன்பு.
பெருக்கிய குப்பை போல்
பெற்றபிள்ளையை தொட்டியில் விட்டாயே !!!!!
வீட்டை சுத்தம் செய்த நீ,
வயிற்றிலேயே என்னை சுத்தம் செய்திருக்கலாமே ......
பெருக்கிய குப்பையை கூட தரம் பிரிப்பார்கள்
தரம் பிரிக்க முடியாத குப்பை ஆனேனோ!!!!!
தொப்புள் கொடியை வெட்டியது என்னை
தெருகோடியில் விடவா.......
தண்ணீர் குடத்தில் இருந்து பிறந்த என்னால் ,
உன் இதயத்தில், ஈரத்தை கூட காணமுடியவில்லை..........
தெருவோரத்தில் எறிந்தாயே ,மனதோரத்தில் இடமில்லை என்றா ?????
ஒருமுறைக்கு இருமுறை யோசித்திருந்தால் -என்
இருள் நீங்கி இருக்குமே ..........