சாதி மல்லி சரம் தொடுத்து ....

சாதி மல்லி சரம் தொடுத்து
சாயந்திரமா நான் வரவா
என் அத்தை மவளே சித்திரை பூவே
ஆத்தோரம் கதை பேச நீ வரியா .

மாம்பழக் கன்னக்காரி மயக்கும் சிரிப்புக்காரி
கரும்பு கடிச்சிக்கிட்டு காலாட்டி நீ நடக்கையிலே
கால் கொலுசு கொஞ்சுதடி எம்மனசு துள்ளுதடி
என் அத்தை மவளே சித்திரைப் பூவே
ஆத்தோரம் கதை பேச நீ வரியா

மரமா மாமன் மவன் நான் நிக்கையிலே
உன் அப்பன் கலேக்டர் மாப்பிள்ளை பாக்கலாமா
அடி கைநாட்டுக் காரி நான்தாண்டி உனக்குச் சோடி
என் அத்தை மவளே சித்திரைப் பூவே
ஆத்தோரம் வாடி கன்னத்தில் ஒன்னு தாரேன்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (18-Aug-13, 6:44 pm)
பார்வை : 107

மேலே