தேர்தல் செலவு 1 ரூபாய் ? வெற்றி ,,,,,,நமக்கே
தேர்தல் செலவு 1 ரூபாய் ? வெற்றி ,,,,,,நமக்கே
இந்த ஊர்ல படிப்பறிவும் பள்ளிக்கூடமும் தான் இல்லையே தவிர
கட்சி கொடியும் கட்சிகளும் ஜாஸ்தி ,
வாங்குற சம்பளத்துல பாதியாவது தேர்தல் சமயத்துல கட்சிக்கு செலவு செய்ற கூட்டம் ,ஆனால் ஒருபோதும் ஒருபோதும் கட்சியோ தலைவனோ இவர்களுக்கு எதுவும் செய்யவில்லை ,
அத பத்தி அவர்கள் சிந்திகிறதும் இல்லை ,
இதவிட பெரிய விஷயம் செத்தாலும் சாவார்களே தவிர மாறி வேற சின்னதுல ஒட்டு போடாத கூட்டம்
மாறி மாறி ஏதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் ,இவர்களுக்கு அந்த கட்சி தலைவன் கூட அஞ்சு வருசத்துக்கு அந்த பக்கம் வரமாட்டான்
ஏன்? நமக்குள்ள ஒற்றுமை இல்லை
சுத்தம் ,சுகாதாரம், கல்வி மருத்துவமனை,குடிநீர் ,மின்சாரம் இப்படி
எதுவுமே இந்த ஊர்ல சரிவர கிடையாது ,
இதையெல்லாம் சரிபடுத்த அந்த ஊர்லய அதிகமா படித்த இரண்டு பேர் ஒரு திட்டம் போட்டார்கள்
ஊர்ல இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு இந்த தடவை தேர்தலுல நமக்கு எல்லாம் கிடைக்கனுமுனா நாங்க சொல்லுறத கேட்கணும்
என்றார்கள்
அதற்க்கு எல்லாரும் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்
நம்மளுல யாராவது தேர்தலுல நிக்கணும் என்றார்கள் , யாருமே சம்மதிக்கல,
அது அவர்களுக்கு நல்லாவே தெரியும் மாறி ஒட்டு போடாத கூட்டம் இவர்கள வேற வழியில தான் கொண்டு வரணுமுன்னு
உடனே அவர்கள் நீங்க உங்கள் உங்கள் தலைவர்களுக்கே ஒட்டு போடுங்கள் , அதை நாங்கள் தடுக்கல, ஆனால் ஒட்டு கேட்டு வரும் பொது நீங்க யாரும் எதுவும் சொல்லாமல் எங்க பின்னாடி நில்லுங்கள், எந்த தலைவர் வந்தாலும் ஒற்றுமையா வந்து நிக்கணும் ஆனால் , உங்களோட தலைவருக்கே ஓட்டும் போடுங்கள் என்றார்கள் எல்லாருக்குமே கொஞ்சம் குழப்பம் ,
ஆனாலும் எல்லாரும் சொன்ன மாதுறியே எல்லாரும் வந்து நின்றார்கள் ,
ஒவ்வொரு தலைவர் வந்தவுடன் இவர்கள் அந்த தலைவரின் காதில் எதோ சொல்லிவிட்டு கையில் இருப்பதை மூடியபடி கொடுத்தார்கள்
எல்லாருக்கும் ஒரே குழப்பம் என்னடா கொடுத்தார்கள் என்று அவர்களிடம் கேட்டதற்கு இந்த தடவை உங்கள் சார்பாக தேர்தல் நிதி கொடுத்தோம் உங்கள் தலைவருக்கு என்றார்கள் ,
இப்படியே எல்லா தலைவருக்கும் நடந்தது ,
ஆனால் தேர்தல் முடியும் முன்னரே அந்த ஊரில் எல்லாவசதிகளும் நடைபெறத் தொடங்கின ,
ஊரே சென்று அவர்களிடம் கேட்டது எந்த தலைவர் இதையெல்லாம் செய்தார் என்று அதற்க்கு அவர்கள் இந்த இரண்டு தலைவர்கள் தான் என்று தங்களை சொன்னார்கள்
எப்படி என்று யோசிக்க வேண்டாம் எங்களுக்கு ஆன செலவு ஒரு ரூபாய் தான் என்றார்கள்
ஒரு எழும்பிச்சை பழம் ஒரு ரூபாய் தான்,, அது தான் தேர்தல் செலவு அதை தான் தேர்தல் நிதியா உங்கள் தலைவருக்கு கொடுத்து நம்ம ஒற்றுமைய எடுத்து சொல்லி இந்த நிதிய வாங்கினோம்
எது எப்படியோ செலவு ஒரு ரூபாய் வெற்றி நமதே
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
உங்கள் நண்பன்
சதீஷ்