உன்னை சுவாசித்தேன் !....

மலர்ந்து மலரும்
மலரிலே
உன் முகம் கண்டேன்
மயங்கும் என் இதயத்தில்
உன் முகம் கண்டேன்
மலர்ந்து மலரும்
மலரில்
உன் சுவாசம் கண்டேன்
மயங்கிய நான்
உன்னை சுவாசித்தேன்
மலரை கண்ட நான்
உன் நினைவில்
என்னை மறந்து
என்னை அறியாமல்
உன்னை கண்ட
மலரை பறித்தேன்
உனக்காக நான்
உன்னருகில்
நின்றேன் நான்
உன்னருகில் நின்ற
என்னை மறந்து
நீ
என் கையிலிருந்த
மலரை கண்டு
வியந்து என்னருகில்
நீ
இருந்தாய்
உன்னை காணும்
என் கண்கள்
உன் விழி பார்வை
கண்டு
உன்னருகில்
வந்து
உன்னை கண்ட
மலரை
உனக்கு கொடுத்து
உன்னோடு நானென்றும்
உன் பார்வையே நானென்றும்
உன்னோடு நான்
என்றென்றும்
என்றும் அன்புடன்