காட்சிகளை கண்டால் கவிதையும்
![](https://eluthu.com/images/loading.gif)
துள்ளி விளையாடும் மீன்கள்
பள்ளிக் கொண்டுள்ள மலை
அசைந்து சென்றிடும் கப்பல்
அழகாய் தோன்றிடும் வானவில் !
இசையும் இயற்கையும் உலகில்
இறுகிய இதயத்தை உருக்கிடும் !
இரண்டும் இணைந்தால் என்றும்
இளகிடும் மனங்கள் அதிகமே !
கற்பனை செய்து பார்த்தேன்
கண்டிடும் கப்பலில் பயணம் !
சுண்டி இழுத்திடும் சூழலால்
சுற்றமும் உற்றமும் மறந்திடும் !
ரசித்திடும் மனங்களும் பாடிடும்
ராகமே அறியாத பாடல்களை !
வாசிக்கும் இதயங்கள் இசையை
வார்த்தைகள் இல்லாத மொழியை !
காட்சிகளை கண்டால் கவிதையும்
சாட்சிகள் சொல்லவே வருகிறது !
அழகுறவேத் தெரியும் கண்களுக்கு
அழகில்லாப் பொருளும் கவிஞனுக்கு !
இயற்கைச் சூழலை பாதுகாப்போம்
இருக்கும்வரை மகிழ்ந்திடுவோம் !
நாட்டின் வளத்தைக் காத்திடுவோம்
நாமும் நம்மால் முடிந்தவரை !
பழனி குமார்