திருமணம்!
அழகாக விடிந்தது அன்றொரு காலைப்பொழுது
ஆம் எனக்காக நிச்சயக்கப்பட்ட தினம்!
அனைவரும் தெரிந்த முகமாக இருந்தாலும்
ஏனோ தெரியவில்லை
மனதிற்குள் ஒரு படபடப்பு நடுக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பில் இருந்து அமைதி கிடைத்தது!
ஆம் எனக்கென்று ஒரு ஜீவன் என் கைபிடிக்கும் போது
ஆம் எனக்கென்று ஒரு புது உறவு பேசிய முதல் வார்த்தை கேட்டவுடன்
மனது எங்கோ பறந்தது!
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள
சில தினங்கள் தேவைப்பட்டது!
இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்து
அமைதியாக கழிந்தன நாட்கள்!