ஆயிரம் சொந்தம்

நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே....
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே....
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே.....
இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே....
ஓராயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ..

எழுதியவர் : ஜுபைடா (21-Aug-13, 1:07 pm)
Tanglish : aayiram sontham
பார்வை : 97

மேலே