இதுவும் கவிதை தானே?

என்னடி ஆச்சு...!
முன்பெல்லாம் கன்னத்தில்
குழி விழுக சிரிப்பாய்..
எப்பொழுது
என் இதயத்தில்
குழி விழும்படி
முறைக்கிறாயே ஏன்..?

முன்பெல்லாம்
ஏன் மேல் அவ்வளவு
காதல் பைத்தியமா என்பாய்..
இப்பொழுது
காதலை மட்டும் எடுத்துக்கொண்டாய்
நான் அனாதையாக
அழுதுகொண்டிருக்கிறேன்
பைத்தியகாரனாக..!
உன்னோடு சேர்ந்து சென்ற
இடங்கள் எல்லாம்
ஏளனமாய் சிரிக்கிறது
என்னுடைய தனிமையை பார்த்து
எப்படி சொல்லி புரிய வைப்பேன்
என்னுடைய வேதனையை ..

ஏன் அம்மாவிற்கு தெரியாத
சில ரகசியங்கள் கூட
ஏன் தலையணைக்கு தெரியும்
உன்னை நினைத்து
கண்ணீர் விடும்போது எல்லாம்
அருகில் இருந்தது
அது மட்டும் தான்...!

ஜோசியம் பார்க்க சென்றபோது
எனக்கு தாஜ்மஹால் வந்தது
அன்று சந்தோஷத்தில் மிதந்தேன்
இன்று தான் புரிந்தது
வந்தது உன் கல்லறை என்று ...!!!

எழுதியவர் : ரகு (21-Aug-13, 1:57 pm)
பார்வை : 162

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே