திரும்பி நடப்பேனா

பத்து மாத பேருந்தில்
பார்வை இல்லா பயணம்
கருவறை விட்டு
காலடி வைத்தேன்
கல்லறை நோக்கி

அம்மா
காசுள்ள உலகில் ஆசையோடு
என்னை பெற்று விட்டாய்!
உன் இதமான இடையில்
இருந்த சுகம்
இந்த இலவம்பஞ்சில்
விழும்போது இல்லையடி!
விரல் கோதிய வித்தையில்
விழிக்காத விழிகள்-
விலைக்கு வாங்கிய விசிறியில்
உறங்கவில்லை தாயே!

தைலமிட்ட தாயின் கையில்
தலைவலி தெரியவில்லை
வாழ்கை வரம் அதுவென்று
அன்றெனக்கு புரியவில்லை
நான் நடந்த அழகினில்
நீ கடந்த சோகங்கள்- விழிகள்
நாள் கடந்த நொடிகளில்
நான் நினைந்து
நனைகிறேன் அம்மா!

காயம் கண்டு
கண்ணில் வழிந்த இரத்தம்
முள்ளில் நடந்து
இதயம் துடித்த சத்தம்
எங்கே நீ தூங்கினாய்!
நீ விழுவது எப்போது
எழுவது எப்போது
கண்டதில்லை கண்கள்

கனவில் கூட
எண்ணி சுகம் கண்ட
என் தாயே!
தொப்புள் கொடியும் வரமடி
திரும்பி நடப்பேனா மறுபடி !

எழுதியவர் : தர்மா (23-Aug-13, 4:02 am)
சேர்த்தது : tamilventhan
பார்வை : 59

மேலே