thoothu
மேகங்களே! மேகக் கூட்டங்களே!
எங்கு செல்கின்றீர்! தூது செல்ல செல்கின்றீரோ!
என் எண்ணத்தை எடுத்துரைக்க துடிக்கின்றீரோ!
அவரை எண்ணி எண்ணி இருப்பதை விளக்க விரைகின்றீரோ!
என் நினைவில் அவர் நிறைந்திருக்கிறார்
அவர் மனதில் யார் இருக்கின்றோர்களோ!
அதனை கேட்க இங்கிருந்து மறைகின்றீரோ!
அவர் நினைவிலும் நான் நிலைத்திருக்கின்றேனோ!
என் யூகம் சரிதானோ என அறிந்து
மேகங்களே! மேகக் கூட்டங்களே விரைந்து வாரீர்!!