யாருக்காகவும் கலங்காதே கண்ணே 555

அழகே...

உன் விழிகள்
கலங்கும் போதெல்லாம்...

என் விழிகளில்
கண்ணீர் மழையடி...

உன்முகத்தில் மட்டுமல்ல
என் விழிகளிலும்...

நான் உன் புன்னகையை
மட்டும் தானடி...

என்றும்
காண வேண்டும்...

என்னால் நீ எப்போதும்
கலங்க வேண்டாம்...

என்னை
வெறுக்கும் நீ...

உனக்கு பிடித்த
மணவாழ்க்கையை...

அமைத்து கொல்லடி
உன் எண்ணம் போலவே...

தொலைவில் இருந்தே
பார்த்து ரசித்து கொள்கிறேன்...

உன்னை...

இனியும் கலங்காதே
எனக்காக மட்டுமல்ல...

யாருக்காகவும் நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Aug-13, 3:06 pm)
பார்வை : 184

மேலே