கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

அனுமதி கிடைத்தால்
அவள் கடித்து துப்பும்
ஒவ்வொரு நகங்களில் இருந்தும்
ஒரு அழகி செய்வேன்....!!!!

காதலைப் பற்றி எத்தனை முறை
ஆச்சரியமாய் (!) அவள் கேட்டாலும்
நான் நிற்பதென்னவோ
கேள்விக்குறி (?) போல் தான்...

அவளின் கண் சிமிட்டல்
விதியை பின்பற்றியே,
இரவும் பகலும் மாறி மாறி
வந்து போகின்றன..!

அவளின் அழகிற்கு
விளம்பரம் தேவை இல்லை,
அந்த வேலையை
சில பல பூக்கள் பார்த்து கொள்ளும்..!!

தினமும் ஒப்பனை செய்தால்
அவள் வீட்டுக் கண்ணாடியும்
நிச்சயம் ஒருநாள்
"உலக அழகி" ஆகும்....!!

அடியே கிறுக்கி,
எங்காவது ஓடி மறைந்து விடு,
உன்னைத் தேடி ஆயிரம் தேவதைகளும்,
சில நூறு நிலவுகளும் வாசலில் நிற்கின்றன..!!

திருட்டுத்தனமாக நீ செய்யும்
சில குறும்புகளைப் பார்த்தால்,
நிலா கூட சிறு சிறு துரும்புகளாக
வெடித்து சிதறி விடும்..!!!

அவள் அழகின் உச்சம் கண்டால்
அழகு ஹைக்கூக்களும்
பொறாமையில் அச்சம் கொண்டு
கவிதையின் கருவை கொலை செய்யும்..!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Aug-13, 3:50 pm)
பார்வை : 115

மேலே