கவிக் கு(கி )ழவியின் வார்த்தை விளையாட்டு ...!!
ஊசி விரல் குத்த குருதி வரும்
பாசி வழுக்கி விட கால் உடையும் ...!
நாசி நீர் வடிய கபம் பிடிக்கும்
தூசி விழி பட்டால் கண் உறுத்தும் ...!
வீசி வலை விரிக்க மீன்கள் மாட்டும்
பூசிமெழுகி கோலமிட வாசல் அழகாகும் ...!
மாசி மகம் பிறக்க ஜகம் ஆளும்
யோசி தொடங்குமுன் வெற்றி உனதாகும் ...!
வாசி நூல்பலவும் புத்தி விரிவாகும்
நேசி தாய் மொழியை சித்தம் தெளிவாகும் ...!
ராசி கல்அணிய கிரகதோஷம் விலகிவிடும்
காசி சென்றுவர பாவமெல்லாம் பறந்தோடும் ....!
ஏசி (கிளி ) மொழி கேட்க கவலை கழிந்தோடும்
பேசி தீர்த்தால் சண்டையும் சமாதானமாகும் ....!
யாசி தமிழன்னையிடம் கவியும் சித்திக்கும்
ஆசி கிடைத்துவிட்டால் முத்தமிழும் வரமாகும் ...!!