நிலா ரசிகை

நீல வண்ணப் பக்கங்களில்
அந்தி வானக் கவிதையை
எழுதி முடித்தான் ஆதவன்.
திருப்பிப் பார்த்து
நன்று தேவா ! என்று
கருத்துரைத்தாள்
நிலா ரசிகை
நட்ச்சத்திரங்களுக்கு
இரவுத் திரையை
விரித்துக் காட்டினாள்
நன்றி ! ரசிகை நீ ஒருத்தி போதும்
என்று விடை பெற்றான்
அந்த மேலை நாட்டுக் காதல் கவிஞன்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Aug-13, 11:24 pm)
பார்வை : 135

மேலே