அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
இறைவன்
என்னை படைக்கவில்லை
நானும்
இறைவனை படைத்ததில்லை!
என்னை ஈன்றது
என் தாய்
என்பதால்
அவள் இறைவன் ஆனாள்
என் வீட்டு கோவிலில்
இருட்டு சமையல் அறையில்
புகையில் புதைந்து கிடக்கும்
செப்பு சிலைதான்
அவள்…
அவள்
என்னை ஈன்ற நாள் முதல்
கடுகளவும் குறை இல்லை
அவள்
என் மீது கொண்ட
அன்பு….
என்னை இவ்வையகம் ரசித்திட
என்றும் சுமந்து இருப்பாள்
வெட்கை புஷ்பங்களை அவள்.
அவள்
உயிர் வாழ
இரு வேலை தான் உணவு உண்பாள்
நான்
நன்றாய் உயிர் வாழ
ஒரு வேலை விரதம் இருப்பாள்
இறைவனுக்கு!
அவளுக்கு வெளி உலகம் தெரியாது,
அவள் வேலை என்றுமே குறையாது,
என் வீட்டுக்கு ராணிதான் அவள்
ஆனால்
போட்டுஇருப்பதோ
வேலைக்காரி வேஷம்!
என்னை அடிப்பாள்
அடி எனக்குத்தான்
ஆனால்
வலியோ அவளுக்கு!
என் மீது கோபம் கொள்பதாக
தனுக்கு தானே
தண்டனை
கொடுத்து கொள்வது
அவளின் வழக்கம்!
அளவுக்கு மீறி
அன்பு காட்டும் அரக்கி.
அடம் பிடித்தல்
அடி கொடுக்கும் அழகி!
என் கண்கள்
அவ்வப்போது கண்ணிற் சிந்தும்
அவள் விரல்கள்
அதை
துடைக்கும் என்பதால்….
என் விழிகள்
என்றும் பார்த்திருக்கும்
அவள் முகங்களை
என் கரங்கள்
என்றும் சுமந்திருக்கும்
அவள் பாத சுவடுகளை!
என் உடலோடு மனமும்
உறங்கி கிடக்கும் அவள் மடியினில்…
….. அம்மா…….