பேருந்து நிறுத்தம். . .

அன்று காலை வழக்கம் போல் நான் பஸ் ஸ்டாப்பில் மரதிருக்கு அடியில் பேருந்துக்கு காத்திருந்தேன். அங்க வழக்கம் போல தன்னை யாரும் கவனிக்கல்ல நீனனச்சு - பசங்கள ஓரா கண்ணால பாக்குறா பெண்களும், எந்த எந்த பெண்ணு எந்த எந்த டைம்க்கு வரும்னு டைம்-டேபிள் போட்டு காத்திருக்கும் பசங்களும், வயசான பெரியவங்களும், வேலைக்கு போக காத்திருபவர்களும், ஸ்கூல் போக பசங்களும் சரியா நேரம் தவறி வரும் பஸ்க்கு காத்திருந்தாங்க.

அந்த பிஸியான நேரத்தில் ஒரு பெரியவர் - பெரிய தாடியோட கிழிஞ்ச சட்ட போட்டு புரியாத மொழியில் பாட்டு பாடிட்டு வந்தாரு. .

அங்க ஒருவர் பஸ் வராத கோவத்த அவனுக்கு போன் பன்றவங்க கிட்ட கத்திக்கிட்டு இருந்தான், அவன் அந்த பெரியவர பாத்து பைத்தியம்னு சொல்லும்போது தான் எனக்கு தெரியும் இவங்க இரண்டு பேருல பெரியவர் தான் பைத்தியம்னு. .

அங்க இருந்த ஸ்கூல் பசங்க அவர கேலி பண்ணாங்க, பெண்ணுங்க அவர பாத்து சிரிச்சாங்க,
சில பேர் அவர பாத்து முகத்த சுளிசாங்க. .

அந்த பெரியவர் பாட்டு பாடியபடி நான் நின்றிருந்த மர நிழலை கடந்து சென்றார், அப்போ அவரு பாட்ட நிறுத்திட்டு அவர பைத்தியம்னு சொன்னவர் கிட்ட போய் 2 ரூபாய் கேட்டாரு, அவர் கேட்டதில் ஒரு உரிமை இருந்தது. அந்த ஆளும் முணுமுணுத்தபடி 2 ரூபாய் கொடுத்தாரு. அந்த பெரியவர் பக்கத்தில் இருந்த கடைக்கு போய் எதையோ வாங்கி கொண்டுவந்து மகிழ்ச்சியாக எதையோ பேசியபடி மரத்த சுத்தி போட்டாறு. .

எனக்கு அவர் போன பிறகு தான் தெரியும் அவர் மரத்துக்கு கீழ் இருந்த எறும்புக்கு சக்கரை போட்டாரு. . .


அவர பாத்து பைத்தியம்னு சொன்னாங்க, கோமாளின்னு சொன்னாங்க, கேலி-கிண்டல் பண்ணாங்க, ஆனா அவர் இந்த பரபரப்பான உலகத்தில நாம் யாரு கவனிக்காத ஒன்ன அவர் செய்தார். அவர் பேசுன மொழி எனக்கு சத்தியமா புரியல ஆனா அவர் என்னை இதை எழுத வைத்தார். .

நான் அதற்குபிறகு அவரை அங்கு பாக்கவில்லை.
ஆனால் 2 வாரத்துக்கு சக்கரை மரத்துக்கு கீழ் இருந்ததை பார்த்தேன்.

நம்மை சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது, சிலர் நாம் செய்வதை கோமாளிதனம் என்பார்கள், ஆனால் இவை அனைத்திற்கும் மேல் நாம் செய்வது சரியோ! தவறோ! அதை ஒரு சிலர் பின்பற்றுவார்கள்.

எனவே நாம் செய்வது சரியோ! தவறோ! அதை குறை சொல்ல 4 பேரு இருந்தாலும் ஒருவராவது நம்மை பின் பற்றலாம். எனவே நம் செயலில் ஒரு நன்மை இருக்கட்டும். . .

எழுதியவர் : கண்ணன் (25-Aug-13, 8:33 pm)
Tanglish : perunthu nirutham
பார்வை : 230

மேலே