என் வழிகாட்டி என் தோழி

பாதை தெரியாமல் தவறான
முட்பாதை தேர்வு செய்தேன்
பாதையை பண்படுத்தி
உடன் நின்றாய் நீ !!!

கேள்விக்கு விடை அறியாமல்
தவித்து நின்றேன்
கேள்வியை திருத்தும்
மொழி தந்தாய் நீ !!!!

கரைபுரண்டோடும் வெள்ளமாய்
கண்ணீர் சொருக நின்றேன்
தென்றலாய் வீச
வைத்தாய் நீ !!!!

பாறையாய் யாருக்கும்
பயனின்றி நின்றேன்
என்னை சிற்பமாய் செதுக்கிய
உளியாய் நீ !!!

புன்னகையின் முகவரி
அறியாமல் நின்றேன்
நட்பு என்னும் கடிதம் அனுப்பி
முகவரி சொன்னவள் நீ !!!

என்னுள் உன் தோழமையில்
என்றும் அழியா சிற்பமாய்
நிலைத்து போனாய் நீ !!!!

நீயே என் வாழ்க்கை
பாதையின் வழிகாட்டி!!!!

தொடர்வேன் ஒரு பயணம்
உன் விழி காட்டும்
திசையில் மறுநிமிடம் !!!!!

கரம் கொடுப்பாய் உன் தோழமையில்
என்றும் எந்தன்
வெற்றி பயணம் தொடர
என் வாழ்கையில்!!!!


என்றும் உங்கள்
உமா நிலா

சமர்பிக்கிறேன் என் வழிகாட்டி
சௌமியாவுக்காக ********

எழுதியவர் : உமா நிலா (25-Aug-13, 10:49 pm)
பார்வை : 630

மேலே