அன்பின் வடிவே .....!!

சாந்தம் தவழும் வதனம்
காந்தவிழிகளில் அருட்பார்வை ....
முகத்தில் ஓடும் வரிகள் கூட
முகவரி சொல்லிவிடும் ....!!

அல்பேனியாவில் உதித்த
அருள் ஒளி....!
அன்னை பூமியாம் பாரதத்தின்
அருட் பேறு...!
அகிலத்தோர் தொழும்
அருட் சகோதரி ...!
அன்பின் வடிவமே
அன்னை தெரசா ....!!

தீராப்பிணியால் துயருற்றோரையும்
தாதியாய் தாயாய் அரவணைத்தாய்....!
பாராமுகமாய் புறந்தள்ளப் பட்டோரை
பாசமுடன் பேசி பரிவளித்தாய் ....!!

பாரோர் இதயம் இடம்பிடித்த தேவதை நீ !
பெண்மணிகளில் கண்மணி நீ !
வனிதையருள் புனிதை நீ !
அன்னையர்க்கே அன்னை நீ ....!!

சேவையின் அர்த்தமே நீதானே ...
தேவை உம்போல் அன்னை எமக்கு !
தூய்மையின் சின்னமே ...!
ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுவாய் ....
பிரபஞ்ச நலம் பேணவே....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Aug-13, 10:55 pm)
பார்வை : 265

சிறந்த கவிதைகள்

மேலே