சாதி

சாதிச் சுடுகாட்டில்

எரிகின்ற பிணங்களின் நடுவில்

சுவாலைகளைச் சுவாசிக்க

முடியாதவனாய்

சாதியையும் எரிக்கவென்று

நண்பனின்

உடலுக்காய் உடையொன்றைப்

போடவேண்டி



சவப்பெட்டி வாங்கப்

போனேன்

கடைக்காரன் கேட்கிறான்

தம்பி நீர் என்ன சாதி....?

எழுதியவர் : முல்லைக்கேசன் (26-Aug-13, 11:33 am)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 50

மேலே