சரிந்த ஆலமரம்..!

என் வீட்டு ஆலமரம்
சில்லென்று கண்விழிப்பேன்
சிட்டு குருவி ஓசையிலே..!
அடக்கமாய் பல் தேய்ப்பேன்
அழகான உன் விழுதினிலே.!
சுட்டெடுக்கும் இட்டலிகள்
சுவைப்பது உன் இலையினிலே..!
பள்ளி தோழனை காத்து நிற்பேன்
பக்கதுணையாய் உன் அருகினிலே..!
பகல் சூட்டில் பரிதவித்து பாதங்கள்
பல தடவை உன் நிழலினிலே..!
உன் பழம் தின்ன பறவைகள்
உவகையுடன் உன் கிளைதனிலே..!
இரவு ஓடி வந்து விட்டால்
இறக்கை ஒடுக்கும் கூட்டினிலே..!
இன்று இதோ நீ சரிந்து விட்டாய்
இனி இவை எல்லாம் யார் தருவார்..?