ரெங்கா நமக்காக

இராமநாதபுரத்தில் நேற்று
இராத்திரி என்பதால் சற்று
நெருக்கமில்லாமல் நின்றிருந்தோம்
நெடும் தொலைவுக்கும் காரிருட்டு

இருவர் கண்களும் இருட்டை பார்த்து
ஏதோ ஒரு நிழல் கண்டுவிட்டு
கபடன் என் நிழல் அதுதானென்று
கவிதை வந்தது நீ சென்று பார்க்க
காதலின் நிழல் அதுதானென்று
கற்பனை வந்தது என் குற்றமில்லை

பச்சை கண்ணாடி அணிந்து கொண்டு
பார்த்தால் உலகம் பச்சை ஆகும் என்
கொச்சை கண்கள் இமை திருத்தி
கோபம் கொண்டது என்ன நியாயம்

நிழலின் உண்மை காண்பதற்கு
நியாயம் என்பதை தெரிவதற்கு
நெருங்கி கொண்டோம் நிழல் அருகில்
நின்றிருந்தது மரக்கட்டை அங்கே

ஒரு முனையில் நீ பிடித்து
மறு முனையில் நான் பிடித்து
செதுக்கி கொண்டோம் சிலையொன்று
சிற்பம் தூக்கி நடக்கலாம் என்றால்

மரப்பாவை மதி கொண்டு
மனித நம் தோளை விட்டிறங்கி
முந்தி செல்லும் நம்மோடு
முடிவடையா நம் நட்பு தோளோடு

சு ......ம்....மாயில்லை அன்பென்றால்
சுமந்து சொல்லும் மரப்பாவை
மூன்று பேரும் நட்பை சுமந்து
முடித்து வைப்போம் கற்பனையை


எழுதியவர் : . ' . கவி (28-Dec-10, 10:39 am)
பார்வை : 1509

மேலே