போராளியின் இறுதி நினைவுகள்

என் தாயிக்கு வலி கொடுத்து
நான் பிறந்தேன் இவுலகில்

பிறந்த குழந்தை அழுதால் தான்
அக்குழந்தைக்கு உயிருள்ளது என
அன்று நான் அழுக என் தாயின் அழுகை
புன்னகையாய் மாறியது

தன்னை காக்க புதல்வன் பிறந்தான்
என்று புன்னகையிட்டாலோ அல்லது
இவீழத்தை காக்க போராளி பிறந்தானென்று
அழுகையில் ஆனந்த கண்ணீர்
கொண்டு புன்னகையிட்டாலோ???

அன்று என்னை சுமந்த என்
தாயையும் இவீழ மக்களையும் நான்
சுமப்பேன் என் இறுதி சுவாசமுள்ளவரை

பிறந்ததும் நான் அழுதேன் அன்று
இன்று எதிரியின் குண்டடிப் பட்டும்
அழுகையில்லை என்னில்
மாறாக புன்னகையிக்கிறேன் எம்மக்களே
உங்களை காப்பாற்றுகிறேனென்று,,,,,,,
,,,,,,,,,,,,, மெளனம் ( எதிரியின் குண்டுகள் துலைத்தன அப்போராளியின் இதயத்தில்)

======== நமக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடம் எத்தனை
சிந்தனைகளிருந்திருக்கும் என நினைத்து என் அழுகையோடு முடிக்கிறேன்.

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (27-Aug-13, 10:00 am)
பார்வை : 82

மேலே