அவள் விழிகள் ஒரு நெருப்பாய் !...

காலை வேலை தேடி !..
விழி பாதை தேடி !...
பார்க்கும் வேலை தேடி !...
பயணமாய் பாதையில் நான் !..

பயணத்தின் வழி தேடி !..
விழி பாதை தேடி !...
பாதத்தின் வலியரிந்து
பார்வை நிலலறிந்து
நிற்கும் மரத்தின் நிழல் தேடி !...
நிழலின் ஓரமாய் அவள் !..

பார்க்கும் பார்வை
பாதை பக்கம் பார்க்க !...
பார்க்கும் விழி
வழி ஓரம் பார்க்க !...
ஓரத்தில் ஓய்வெடுக்கும்
விழியை விழி பார்க்க !...
.
அவளை
காக்கும் கரங்கள்
கைவிரித்ததால்

எண்ணங்கள் ஏமாந்து
இதழ்கள் சோர்ந்து
சோகத்தை சுமக்கும்
இதயங்கள் எரிந்து
அவளின்
கண் சிவந்து
காக்கும் இமைகள்
சினம் கொண்டு
பார்ப்பதால்
அவளை பார்க்கும்
விழிகளுக்கேல்லாம்
அவள் விழியின் பார்வை
நெருப்பாய் அவள் விழிகள் !...

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (27-Aug-13, 5:44 pm)
பார்வை : 148

மேலே