விடுமுறை நாளில் வீடுகள்

பள்ளிக்கு சென்று வருவதும் இன்று
பயணமாய் மாறியது !

அலுவலுகப் பணிக்கு செல்வதும்
அன்றாடம் சிரமாமகிறது !

அதிகாலை விழித்து அடுப்படியில்
அலுவல் புரியும் அம்மா !

பிள்ளைகளை எழுப்பி அனுப்பிட
பிசியாகும் பெற்றவர்கள் !

கணவன் சென்றதும் காலாறும்
களைப்புடன் மகளிர் !

வீட்டுப் பணிகளை முடித்திட
விட்டதில் தொடர்வது !

இடையினில் முடிந்திடா தொடர்களை
இடைவிடாமல் பார்ப்பது !

மாலைப்பொழுது வந்ததும் மாறிமாறி
மாலைக் காட்சிகள் மீண்டும் !

விடுமுறையே விருந்து இவர்களுக்கு
வீடே விளையாட்டு மைதானம் !

அமைதிப் பூங்காவான இல்லத்தில்
ஆரவாரம் அடங்கிடாது !

இருப்பவர் இதயங்கள் கொண்டாடும்
இல்லாத திருவிழா போல !

சிதறிக் கிடக்கும் பொருட்கள் எல்லாம்
சீரழிந்த சென்னை சாலைகள் போல் !

ஆளுக்கொருக் கைப்பேசியில் இருப்பர்
ஆவலுடன் பேச்சுடன் அளவிலாமல் !

இடமாறி அமர்ந்திருப்பர் இன்பமுடன்
இடைஇடையேதான் பேசிடுவர் !

அழையா விருந்தினரும் வந்திடுவர்
அன்புடன் அளவலாவிடுவர் !

வாக்கெடுப்பு நடந்திடும் மாலையில்
உண்டு மகிழ உணவகம் சென்றிட !

வீடு திரும்பியதும் நினைவுக்கு வரும்
விடுமுறை முடிந்தது என்று !

விடிந்ததும் தொடர்ந்திடும் நிகழ்வுகள்
விடுமுறை அடுத்து வரும்வரை !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-13, 9:24 am)
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே