ஒரு பெண் சொல்கிறாள்
காற்றில்கூட
இன்னும் கசிகிறது
பிணவாடை
மண்ணில்கூட
ஆங்காங்கே தோய்ந்து
கிடக்கிறது ரத்தம்
நதியோரங்களில்கூட
அழுகிக்கிடக்கின்றன
மனித சதைகள்
பறவைகள் பட்டாம்பூச்சிகள்
காட்டுவிலங்குகள்
எல்லாமே பயந்து
இடம் பெயர்ந்துவிட்டன
என்களைவிட்டுவிட்டு
இப்பொழுது இங்கு பூக்கும்
ஒருசில பூக்கள்
கல்லறைக்கு போகுமேத்தவிர
ஒருபோதும் எங்கள்
கூந்துக்கு வரபோவதில்லை ...!