நீல வண்ணக் கண்ணா வாடா....நீயும் ஒரு முத்தம் தாடா.......
நீல வானம் நீந்தியது குளத்தில்
கண்ணனின் கன்னம் வருட
கன்னி நான் ஆசை கொண்டேன்...
கோபியர் போல அழகில்லை நான் எனவே
கார்கால முகிலானேன்.......
விழ வைத்தேன் ஒரு மழைத் துளி குளத்தில்........
அங்கே உருவானது வட்ட வட்ட நீர்கோலம் அல்ல..
வண்ணக் கண்ணன் கன்னத்தில்.....நான்
வழங்கிய முத்தத்தின் சிறகடிப்பு........
இன்று கோகுலாஷ்டமி..........
இனிமையுடன் கொண்டாடுவோம்
வாழ்த்துக்கள்