தமிழ் பேச ஆசை பட்டோம்
தவழும் நீர் கரை
ஓரமாய்
தாகம் தணிக்க
ஆசை பட்டோம்..!
விடியல் வேண்டி
போராடி....
வீதி எங்கும்
தாலி அருத்து
விதவை
கோலத்தில்
விருந்தானோம்...!
எம் குலத்
தமிழ் பெண்கள்
எம ராணுவர்களின்
காம சதை
வேட்டையில்
கருகினார்கள்...!
தமிழ் பேசிய
எங்களின்
நாவுகள்.....
மண்ணில் துடித்து
செந்நீர் வடித்தது...!
கல்வி பயில
வேண்டிய
எம் பிள்ளைகள்
சிங்களவன் வீசும்
எச்சில்....
சோத்துக்காக
அவன் கால்
பிடித்தன...!
சதைகள்
தொங்கும்
இந்த உடலுக்காக
பசி மயக்கத்தொடு
எத்தனை முறை
படுத்தேலுவது...!
எம் தோழிகளின்
மார்புகள்....
அறுக்கப்பட்டு
வேட்டை
நாய்களுக்கு
கால் பந்தாகின...!
கற்பை இழந்து
சொந்தம் இழந்து
வீட்டை இழந்து...!
குருதியால்
நனைக்க பட்ட
என் தாயின்
இறுதி
ஊர்வலம்...
கதறி அழுகிறேன்
வற்றி போன
கண்ணில்
நீரற்று.....!
***கே.கே.விஸ்வநாதன்***