இது கவிதையும் அல்ல நான் கவிஞனும் அல்ல!

என் வலிகளை வார்த்தைகளாக
மொழி பெயர்க்கிறேன்

நான் வலி – மொழி பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


வாழ்வில் பட்ட அடிகளை
வார்த்தை அடிகளாக மாற்றுகிறேன்

நான் அடி – அடி பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


என் சோகங்களை
சொல்லாமல் சொல்கிறேன்

நான் சோகம் – சொல் பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


என் ஏக்கங்களை
எழுத்துக்களில் ஏற்றுகிறேன்

நான் ஏக்கம் – எழுத்து பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


என் அவலங்களை
அச்சுக்களாக ஆக்குகிறேன்

நான் அவலம் – அச்சு பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


என் கண்ணீரை
கருத்துகளாக சேமிக்கிறேன்

நான் கண்ணீர – கருத்து பெயர்ப்பாளன்

இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல


என் துன்பங்களை
எழுதிய நான்
என் இன்பங்களை
எழுத மறந்தேனே

அதனாலா
இது கவிதையும் அல்ல?
நான் கவிஞனும் அல்ல?


என் துன்பங்களை
எழுதிய நான்
உலக துன்பங்களை
எழுத மறந்தேனே

அதனால் தான்
இது கவிதையும் அல்ல
நான் கவிஞனும் அல்ல.

- தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (28-Aug-13, 10:57 pm)
பார்வை : 126

மேலே