எனது முதல் கவிதை.(ரோஷான் ஏ.ஜிப்ரி)

நினைவில் உயிர்ப்பிக்க
நியாயமற்ற பருவத்தில்
பூமியின் மார்பில்தான் அதனை நான்
புனைந்திருக்க வேண்டும்
இதழ் நனைத்த
ஈரத் தூரிகைகளால்....,
ஒரு புள்ளியாய், ஒரு கோடாய், ஒரு கிறுக்கலாய்
எந்த இலக்கியங்களோடும்
பொருந்த கூடிய ஒரு புனைவாய்
அதை நான் படைத்திருப்பேன்!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.