ஈழ மண் ஆசை

சொந்த மண்ணில்
பிறர் கையை
ஏங்க வைத்து...!

வீதி எங்கும்
பிணங்களுடன்
வாழ வைத்து...!

பசியால் துடிக்கும்
குழந்தைக்கு
கை விரலை
வாயில் வைத்து...!

இரவிழும்
சுதந்திரமாக
திரியும்
மிருகங்கள்....!

பகழிலும்
பதுங்குழியில்
வாழும்
எம் மக்கள்....!

போர்கள்
முடிந்த பின்பும்
நாய்களுடனும்
நரிகளுடனும்
வாழ்க்கை
நடத்தும் அவலம்....!

எம் மக்களின்
ஈழக் கனவு
நிறைவேருமா....!


****கே.கே.விஸ்வநாதன் ****

எழுதியவர் : கே.கே. விஸ்வநாதன். (29-Aug-13, 12:27 am)
சேர்த்தது : K.K. VISWANATHAN
பார்வை : 70

மேலே