முகமூடிகள்
*ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு நிமிடமும்
வேறு வேறு
முகமூடிகள்!
*சில பொருந்துகின்றன
சில வருத்துகின்றன!
விரும்பி அணிந்தவை சில
அணியப்பட்டவை சில!
*சமயங்களில்
முகமூடி ஒன்றாய்
நடிப்பு வேறொன்றாய்!
*மாட்டிக்கொள்வோம்
என்ற பயத்துடன்
நாளும் நாளும்
நகர்த்துகிறோம்!
*நடிப்பது நாமாயினும்
ஏற்றுக்கொள்ள
முடிவதேயில்லை
இம்முரண் வேடங்களை!
*ஒரே முகமூடியுடன்
ஒரே நடிப்பு
நடிக்கத்தான்
ஆசை!
*அந்த ஒன்றும்
கிழிந்து விட்டாலோ
இல்லை
சிதைக்கப்பட்டாலோ
நிஜத்தைத் தாங்க
வல்லமையுண்டா
இப்பார்வையாளர்களுக்கு?
*பொருந்தா முகமூடிகளை
கிழித்தெறிய தான் வேண்டும்.
ஆனாலும்,
ஒரு சில நேரம் தயக்கம்.
இந்த நாடகங்கள்
முடிவதேயில்லை என்பதால்!