கவிஞன் வாழ்ந்து வந்தான்
ஒரு கவிஞன் வாழ்ந்து வந்தான்,
உங்கள் மத்தியில் .
அவனை நீங்கள் பார்த்ததில்லை,
உங்களை கடந்து சென்று மறையும் வரையில்.
ஆனால், இன்று
அவன் கவிதைகள் உங்கள் மூச்சு,
அவனது வரிகள் உங்கள் வாழ்க்கை.
மாற்றத்தை விதைத்துச் சென்ற அவனை நீங்கள் மறந்து விட்டீர்கள்,
அவனது கவிதைகள் உங்களை மறக்க வைக்கிறது தினமும்.