@@@மாறாதோ மனிதருள்ளம்@@@

உள்ளுக்குள் உண்மையிருந்தும்
ஊருக்காக வெளிவாழ்க்கை
அந்நியமோகம் சீரழிவென
அறிந்து உணர்ந்திருந்தும்
அயல்நாடு சென்றுவந்தால்
ஆடம்பரமாய் நடிப்பதேனோ?

மழையின்றி வாழ்வு
மண்ணில் இல்லையென
மனிதன் புரிந்தும் மரத்தை
அழித்து மண்ணைகெடுத்து
மாளிகை கட்டுவதேனோ?

மன அழுக்கு தெரிந்திருந்தும்
மனித அழுக்கை மனத்தால்
அருவருப்பதும் ஏனோ ?
முதுமையில் முடியாதநிலை
தெரிந்தும் முதியோரில்லம்
மனம் தேடுவதேனோ?

இல்லாதவன் இயலாதவன்
என்பதை நன்குணர்ந்தும்
இன்னல் தரவே தங்கள்
பார்வையால் அவர்களை
எள்ளி நகையாடுவதேனோ ?

நச்சுப்புகையால் உயிர்கள்
கேடுசூழ்ந்து அழிந்து போவது
தெரிந்தும் அத்தியாவசியம்
தவிர்த்து அனாவசியத்திற்கு
சொகுசு வாகனமும் வசதியும்
வைத்துகொள்வதேனோ ?

உயிரின் மதிப்பை உணர்ந்தும்
மற்ற உயிர்களை வதைத்தும்
வாழ்வை கெடுக்க வலை
விரிப்பது தன் வாழ்வென
எண்ணி வாழ்வதேனோ?

வருவதும் போவதும் வெறும்
உடலென்பதன் உண்மை புரிந்தும்
காசு பணம் துட்டு தங்கமென
சேர்க்க ஆசைப்பட்டு பாவம்
பழி கர்மம் சேர்த்து முடிவாய்
மண்ணில் மக்கிப்போவதேனோ ?

இருக்கும் வரை இயன்றதை
இனிய வாழ்வாய் இன்புற்று
இன்முகத்தோடு இனிதாய்
வாழ்ந்து விட்டு சென்றிட
மாறாதோ மனிதருள்ளம்!!!

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (29-Aug-13, 2:18 pm)
பார்வை : 97

மேலே