நான் ஒரு கோழை..!

நான் ஒரு கோழை..
சொல்கிறேன் கேளுங்கள்....!
கொஞ்சும் குழந்தையை அடிக்கும் கோழை
கெஞ்சும் மனைவியை உதைக்கும் கோழை
லஞ்சம் கொடுத்து சாதிக்கும் கோழை
நயவஞ்சகம் பேசி நடிக்கும் கோழை
பிடிக்காதவரை வீதியில் பேசும் கோழை
பிடித்தாரை சதியில் வீழ்த்தும் கோழை
ஆள்வோரை கேட்க வாய் மூடும் கோழை
ஆளில்லா வீட்டில் அதட்டும் கோழை
இல்லார் கண்டால் மனம் இரங்கா கோழை
இடுவோர் குறையை புகழும் கோழை
மாற்றான் வளர்ச்சியில் குமுறும் கோழை
தோற்றான் வருந்த குதிக்கும் கோழை
வாக்குறுதி கொடுத்து மறக்கும் கோழை
வறியவர் கண்டு முகம்திருப்பும் கோழை
குற்றம் கண்டால் கண்மூடும் கோழை
குறைகண்டு சொன்னால் ஏற்கா கோழை

கோழைகளின் தலைவனாய் கொடியோடு
கோட்டைக்குள் போக தகுதி இருக்கா..?
நாட்டாரே கேட்பது செவியில் கேட்குதா..?
நாளைக்கு வாரேன் ஒருமனதா அனுப்புங்க..!

எழுதியவர் : குமரி பையன் (29-Aug-13, 3:01 pm)
பார்வை : 233

மேலே