அகிலம் யாவும் அவளே

ஆண்டுகள் கோடி மாதவமாம் அதுபோலே
அயிந்திரண்டு திங்கள் அடியேனைச் சுமந்தவளே

அன்றொருநாள் பெருந்துன்பம் அதனை அடைந்தே
அண்டத்தில் எனக்கோர் இடம் அளித்தவளே

அறிவுக்கு முதலாம் அப்பாவையும் எனக்கு
அடையாளம் காட்டிய அமைதி உருவே

அன்பான கருவறை விட்டகன்ற பின்னும்
அறிவுரை பலசொல்லி ஆகமம்வழி அழைப்பவளே

அறம்வழி வந்த அனைத்து செல்வமுங்கண்டு
அகம்மகிழ்ந்து அணைத்து கொடுக்கும் கருணையுமவளே

ஆடிமுடிந்த பின்னும் ஆறடி நிலமேயானாலும்
அங்கும் அருந்துயர் நீர் உதிர்ப்பவளே

ஆயிரம் பிறவிகள் எல்லையிலாவன்பின் அடைக்களமே
அன்புக்கோர் எல்லையே ஆருயிர் ஆனவளே

ஆற்றிய உதவிக்கெல்லாம் மாற்றுதவி அறிகிலேன்
ஆற்றினேன் இத்தமிழ் மாலை அணிவிக்கவே-நின்னை

எழுதியவர் : பா.வாணி (29-Aug-13, 4:22 pm)
பார்வை : 77

மேலே