நம் நாட்டு மன்னர்கள்....

கருணையின்
வாசற் படிக்கட்டுகளில்
குருணைகளாக
மானிடப் பாத்திரங்கள்....!

தெருவோர கடவுள்களின்
இல்லத்தினில்
திருவோடு ஏந்தி நிற்கும்
வாசல் காவலாளிகள்....!

கேட்டதெல்லாம் கொடுக்கும்
கடவுளின் வீட்டில்
வேலை செய்யும்
நிரந்தரத் தொழிலாளிகள்...!

சாமியை நாடி வருவோர்களுக்கு
இந்த ஆசாமிகள் தான்
முதல் தரிசனம்...!

பிறகு தான்
சாமியின் தரிசனம்....!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (29-Aug-13, 11:52 am)
பார்வை : 70

மேலே