முயற்சி திருவினையாக்கும் .....!! (சிறுகதை )
"ஏய் ! அங்கே என்னடா பண்ணிட்டிருக்கே ...?"
முதலாளியின் குரல் கேட்டதும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு என்னங்கய்யா
என்று ஓடி வந்தான் ராமமூர்த்தி !
"இருக்குற வேலய பாக்கறத விட்டுட்டு என்னடா எந்த நேரமும் மேதாவி போல படிப்பு ?" ஓங்கி ஒரு
குட்டு வைத்தார் முதலாளி நம்பிராஜன் . அவரின் வார்த்தைகள் ராமுவின் இதயத்தை சுட்டது .
தமிழ் மேல் உள்ள தீராத தாகத்தால் பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்தவன், முதலாளிக்குத் தெரியாமல் புத்தகங்களைப் படிப்பான் . அவனுடைய ஆர்வத்தாலும் ,முயற்சியாலும் கவிதை எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டான்.
முதலாளிக்கு டீ வாங்கச் சென்றவன் பென்ஞ்சில்
இருந்த நாளிதழில் பிரம்மாண்ட கவிதைப் போட்டி அறிவிப்பைக் கண்டான் .அவன் மனம் மகிழ்ச்சியில்
துள்ளியது.அந்த நொடி முதல் அதே சிந்தனையில் அவன் மனம் ! மறுநாளே அற்புதமாய் கவிதை
எழுதி அதை உடனே அனுப்பியும் விட்டான் .
நாட்கள் நகர்ந்தது. கவிதை போட்டியில் அவனுக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது .அதை ஒரு விழாவில் வாங்க வரும்படி ராமுவுக்கு அழைப்பு வந்தது .
பரிசளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கியவர்
அவனுடைய முதலாளி நம்பிராஜன். விழா மேடையில் அவர் அமர்ந்திருந்தார் .ராமமூர்த்தி என்று பெயர் வாசிக்கப்பட மேடை ஏறியவனைக்
கண்டதும் அவருக்கு அதிர்ச்சி ...! பரிசு வழங்கும்போது நீயா என்பதுபோல் அவர் பார்வை இருந்தாலும் சுதாரித்து அவன் முயற்சியைப்
பாராட்டி பரிசளித்ததுடன் வேலையிலும்
அவனுக்கு பதவி உயர்வு கொடுத்தார் .....!!